வரலாற்றில் இன்று ஏப்ரல் 10 : 2016 கேரள ஆலய விபத்தில் 111 பேர் பலி

0 103

1710 : காப்­பு­ரிமை பற்­றிய முத­லா­வது சட்ட விதிகள் பிரித்­தா­னி­யாவில் வெளி­யி­டப்­பட்­டன.

1790 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் காப்­பு­ரிமம் பற்­றிய விதிகள் எழு­தப்­பட்­டன.

1815 : இந்­தோ­னே­ஷி­யாவில் டம்­போரா எரி­மலை வெடித்­ததால் பல தீவுகள் அழிந்­தன. இதனால் 71,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1848 : இங்­கி­லாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்­ததில் 250 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1864 : மெக்­ஸிக்­கோவின் மன்­ன­ராக ஆஸ்­தி­ரி­யாவில் பிறந்த முதலாம் மெக்­ஸி­மி­லியன் முடி சூடினார்.

1868 : அபி­சீ­னி­யாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்­தா­னிய மற்றும் இந்­தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்­னனின் படை­களை வெற்றி கண்­டன. 700 எத்­தி­யோப்­பியப் படை­வீ­ரர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1912 : டைட்­டானிக் பய­ணிகள் கப்பல் தனது முத­லா­வதும் கடை­சி­யு­மான பய­ணத்தை இங்­கி­லாந்தின் சௌதாப்ம்டன் துறை­மு­கத்தில் ஆரம்­பித்­தது.

1919 : மெக்­ஸிக்கோ புரட்சித் தலைவர் எமி­லி­யானோ சப்­பாட்டா அரச படை­யி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

1963 : அமெ­ரிக்­காவின் த்ரெஷர் என்ற நீர்­மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.

1972 : வியட்நாம் போரில் அமெ­ரிக்க விமா­னங்கள் வடக்கு வியட்­நாமில் குண்­டு­களை வீசின

1979 : அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ் மாநி­லத்தில் விச்­சிட்டா அரு­வியில் சுழற்­காற்று தாக்­கி­யதில் 42 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1991 : இத்­தா­லியின் மொபி பிரின்ஸ் என்ற பய­ணிகள் கப்பல் லிவோர்­னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்­றுடன் மோதி­யதில் 140 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1998 : அயர்­லாந்து குடி­ய­ர­சுக்கும் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கும் இடையில் வட அயர்­லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

2002 : தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வே. பிர­பா­கரன் கிளி­நொச்­சியில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மகா­நாட்டில் பங்­கு­பற்­றினார்.

2006 : இந்­தி­யாவில் உத்­தரப் பிர­தே­சத்தில் மீரட் நகரில் வர்த்­தகக் கண்­காட்சி ஒன்றில் ஏற்­பட்ட தீயில் 60 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2010: ரஷ்­யாவில் இடம்­பெற்ற விமான விபத்தில் போலந்து ஜனா­தி­பதி லீச் காஸின்ஸ்கி உட்­பட 96 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2012: முன்­னிலை சோஷ­லிஸக் கட்­சியின் தலைவர் குமார் குண­ரட்ணம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு நாடு கடத்­தப்­பட்டார்.

2016: இந்­தி­யாவின் கேரள மாநி­லத்தின் கொல்லம் அரு­கிலுள்ள பரவூர் புட்­டிங்கல் தேவி ஆல­யத்­தி­லுள்ள பட்­டாசுக் களஞ்­சி­யத்தில் ஏற்­பட்ட வெடி விபத்­தினால் 111 பேர் பலி­யா­ன­துடன் மேலும் 350 பேர் காய­ம­டைந்­தனர்.

2016: ஆப்கானிஸ்தானில் 6.6 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் 6 பேர் உயிரிழந்ததுடன் 28 பேர் காயமடைந்தனர். இப்பூகம்பத்தின் அதிர்வுகள், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo