இந்திய அரசியலைக் கலக்கும் நடனத் தாரகை சப்னா சௌத்ரி: தம்வசப்படுத்த பிஜே.பியும் காங்கிரஸும் போட்டி

0 444

வட இந்திய நடனத் தாரகையான சப்னா சௌத்ரி தற்போது இந்திய அரசியலைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஏதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் சப்பனா சௌத்ரி தமக்காகத் தான் என பிரச்சாரம் செய்யப் போகிறார் பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூறிக்கொண்டிருக்கின்றன.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சப்னா சௌத்ரி. சிறு வயதிலேயே மேடைகளில் நடனமாட ஆரம்பித்துவிட்டார். பொலிவூட் பாடல்களுக்கு உடலை வளைத்து அவர் ஆடும் நடனத்தைப் பார்ப்பதற்கு பெரும் கூட்டம் கூடிவிடும்.

28 வயதான சப்னா சௌத்ரி தற்போது ஹரியானாவுக்கு வெளியிலும் வட இந்திய மாநிலங்களிலும் பிரபலமானவராக விளங்குகிறார். சல்மான் கான் நடத்தும் பிக் பொஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்குபற்றினார்.

கடந்த டிசெம்பர் மாதம் கூகுள் தரவுகளின்படி, இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்படுவர்களின் பட்டியிலில் 3 ஆவது இடத்தை சப்னா சௌத்ரி பெற்றார்.

தற்போது அவரை தமது கட்சிக்குள் வளைத்துப் போட காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் (பி.ஜே.பி) முயற்சிக்கின்றன.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் சப்னா சௌத்ரி இணைந்துகொண்டுள்ளாரென கடந்த வாரம் செய்தி வெளியாகியது.

உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில், பி.ஜே.பி. சார்பில் போட்டியிடும் முன்னாள் நடிகை ஹேமா மாலினிக்கு எதிராக சப்னா சௌத்ரி களமிறக்கப்படவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால், சப்னா சௌத்ரி இதை மறுத்தார்.

இதையடுத்து, அவர் பி.ஜே.பியில் இணையப் போகிறார் என செய்தி வெளியாகியது.

ஆனால், இதையும் சப்னா சௌத்ரி மறுத்தார். எனினும், பிரியங்கா காந்தியைதான் சந்தித்ததாகவும், டெல்லி பி.ஜே.பி தலைவர் மனோஜ் திவாரியுடனும் தொடர்புகொண்டதாகவும சப்னா சௌத்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடனக் கலைஞர் சப்னா சௌத்ரியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என உத்தரப் பிரதே பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘ராகுலின் தாயார் சோனியா காந்தியும் இத்தாலியில் இதே (நடனமாடுவது) தொழிலைத்தான் செய்துகொண்டிருந்தார். ராகுலின் தந்தை அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

ராகுலும் தனது குடும்பத்தின் பாரம்பரிய வழக்கப்படி சப்னாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.’ என சுரேந்திர சிங் கூறியமை குறிப்பிடத்தக்கது.

சப்னா சௌத்ரியின் நடன வீடியோ

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!