பொலிவூட் படங்களில் நடிக்க அஜித்துக்கு அழைப்பு: 3 அக்‌ஷன் கதைகள் தயார்: தயாரிப்பாளர் போனி கபூர்

0 213

பொலிவூட் திரைப்படங்களில் நடிக்குமாறு நடிகர் அஜித்குமாருக்கு தயாரிப்பாளர் போனி கபூர் அழைப்பு விடுத்துள்ளார்.

அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை போனி கபூர் தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இப்படத்டதில் படத்தில் அஜித்துடன் பொலிவூட் நடிகை வித்யா நடிக்கிறார். அத்துடன், பாலன்ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இது இந்தியில் கடந்த ஆண்டு வெளியானப் பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் தமிழில் அஜித்குமார் நடிக்கிறார். ஆகஸ்ட் 10-ம் திகதி இப்படம் வெளியாகவுள்ளது.  

இந்நிலையில் பொலிவூட் படங்களில் நடிக்குமாறும் அஜித்த்துக்கு போனி கபூர் அழைப்பு விடுத்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தின்  ‘சில காட்சிகளைப் பார்த்தேன். அஜித்தின் நடிப்பு அற்புதம். அவருக்காக 3 அக்‌ஷன் கதைகளை வைத்துள்ளேன். அவர் விரைவில் பொலிவூட் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார் என நம்புகிறேன்’ என  தயாரிப்பாளர் போனி கபூர்தெரிவித்துள்ளார்.

போனி கபூரின் இந்த அறிவிப்பினால் தல அஜித்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!