ஒலுவில் துறைமுக வளாகத்தின் மணலை விற்பனை செய்யத் தடை!
ஒலுவில் துறைமுக வளாகத்தினுள் குவிக்கப்பட்டிருக்கும் மண்களை அகழ்ந்து விற்பனை செய்வதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தடை விதித்துள்ளார்.
கொழும்புத் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கட்டடத் தொகுதியில் இன்று (10) துறைமுக அதிகார சபை உயரதிகாரிகளுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தடை உத்தரவை அவர் பிறப்பித்தார்.
மணலை அகழ்ந்து விற்பனை தொடர்பில் துறைமுக அதிகார சபையினால் திறந்தவிலை மனுக்கோரல் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ஒலுவில் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் மக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்தத் டை உத்தரவை பிரதியமைச்சர் பிறப்பித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவ விதாரன உள்ளிட்ட பல முக்கிய உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.