வரலாற்றில் இன்று ஏப்ரல் 11 : 2018 அல்ஜீரிய விமான விபத்தில் 257 பேர் பலி

0 132

1831: உரு­கு­வேயின் சல்­சி­புதிஸ் என்ற இடத்தில் நூற்­றுக்­க­ணக்­கான “சருவா” இனத்­தவர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1865: ஆபி­ரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்­தினார்.

1899: புவேர்ட்டோ ரிக்­கோவை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு ஸ்பெயின் அளித்­தது.

1905: பௌதீக விஞ்­ஞானி ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்­பாட்டை வெளி­யிட்டார்.

1921: விளை­யாட்டு வர்­ணனை முதன் முறை­யாக வானொ­லியில் ஒலி­ப­ரப்­பா­னது.

1955: ஹொங்­காங்கில் இருந்து புறப்­பட்ட எயார் இந்­தி­யாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்­டு­வெ­டிப்பின் கார­ண­மாக இந்­தோ­னே­ஷி­யா கடலில் வீழ்ந்து மூழ்­கி­யது. பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் உட்­பட 16 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1957: சிங்­கப்­பூரின் சுயாட்­சிக்கு பிரித்­தா­னியா சம்­ம­தித்­தது.

1965: ஐக்­கிய அமெ­ரிக்­காவில் ஆறு மாநி­லங்­களில் ஏற்­பட்ட சூறா­வளி கார­ண­மாக 256 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1970: சந்­தி­ரனில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக அப்­பலோ 13 விண்­கலம் ஏவப்­பட்­டது. (இவ்­விண்­கலம் சந்­தி­ரனில் தரை­யி­றங்க முடி­யாமல் 6 நாட்­களில் பூமிக்குத் திரும்­பி­யது)

1979: தான்­சா­னியப் படைகள் உகண்­டாவின் தலை­ந­க­ரான கம்­பா­லாவை கைப்­பற்­றின. உகண்டா சர்­வா­தி­காரி இடி அமீன் தப்­பி­யோ­டினார்.

1981: லண்­டனின் தென் பகு­தியில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்­பெற்ற பெரும் கல­வ­ரத்தில் 300 காவற்று­றை­யி­னரும் 65 பொது­மக்­களும் காய­முற்­றனர்.

1987: இஸ்­ரே­லுக்கும் ஜோர்­தா­னுக்கும் இடையே இர­க­சிய ஒப்­பந்தம் லண்­டனில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

2002: வெனி­சூ­லாவில் ஜனா­தி­பதி ஹியூகோ சாவெ­ஸுக்கு எதி­ராக இரா­ணுவப் புராட்சி இடம்­பெற்­றது

2006: ஈரான் வெற்­றி­க­ர­மாக யுரே­னி­யதை செறி­வாக்­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி மொஹம்மத் அஹ­ம­தி­நஜாட் அறி­வித்தார்.

2007: அல்­ஜீ­ரி­யாவின் தலை­நகர் அல்­ஜியர்ஸ் நகரில் இடம்­பெற்ற இரு குண்­டு­வெ­டிப்­பு­களில் 33 பேர் கொல்­லப்­பட்டு 222 பேர் காய­முற்­றனர்.

2011: பெலா­ரஸில் ரயில் ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பினால் 15 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் 204 பேர் காய­ம­டைந்­தனர்.

2012: இந்­தோ­னே­ஷி­யாவில் சுமாத்ரா கடற்­ப­கு­தியில் 8.7 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலும் இந்நிலநடுக்கம் ஓரளவு உணரப்பட்டது.

2018: அல்ஜீரியாவில் அந்நாட்டு விமானப்படை விமானமொன்று வீழ்ந்ததால் 257 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo