வரலாற்றில் இன்று ஏப்ரல் 12 : 1961 யூரி ககாரின், விண்­வெ­ளிக்குச் சென்ற முதல் மனி­த­ரானார்

0 132

1861 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: அமெ­ரிக்க மாநி­லங்­களின் கூட்­ட­மைப்புப் படைகள் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படை­களை தென் கரோ­லி­னாவில் தாக்­கி­ய­துடன் போர் வெடித்­தது.

1864 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: டென்­ன­ஸியில் சர­ண­டைந்த அனைத்து ஆபி­ரிக்க அமெ­ரிக்க படை­யி­னர்­களும் அமெ­ரிக்க மாநி­லங்­களின் கூட்­ட­மைப்பு படை­க­ளினால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1865 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: அல­பா­மாவில் மொபைல் என்ற நகரம் கூட்­டணி இரா­ணு­வத்­திடம் வீழ்ந்­தது.

1927 : ஷாங்­காயில் சீனக் கம்­யுனிஸ்ட் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

1937: விமா­னங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான முத­லா­வது ஜெட் என்ஜின் இங்­கி­லாந்தில் சேர் பிராங் வைட்­டினால் தரையில் பரி­சோ­திக்­கப்­பட்­டது.

1945: அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் காலா­மானார். உப ஜனா­தி­ப­தி­யான ஹரி ட்ரூமன், புதிய ஜனா­தி­ப­தி­யானார்.

1955 : ஜோனாஸ் சால்க் என்­ப­வ­ரினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட போலியோ நோய்த் தடுப்­புசி பாது­காப்­பா­ன­தென பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

1961 : சோவியத் ஒன்­றி­யத்தின் யுரி ககாரின் விண்­வெளிக்குச் சென்ற முதல் மனி­த­ரானார்.

1980 : லைபீ­ரி­யாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றினார். 130 ஆண்­டு­கால மக்­க­ளாட்சி அமைப்பு முறை முடி­வுக்கு வந்­தது.

1981 : முத­லா­வது மீள் விண்­ணோ­ட­மான கொலம்­பியா ஓடம், முதல் தட­வை­யாக விண்­வெளியை நோக்கி ஏவப்­பட்­டது.

1983 : பிரித்­தா­னியத் திரைப்­ப­ட­மான காந்தி எட்டு ஒஸ்கார் விரு­து­களை வென்­றது.

2007 : இந்­தியா அக்னி – III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்­படும் நடுத்­தர ஏவு­க­ணையை 3000 கிமீ தூரத்­துக்கு வெற்­றி­க­ர­மாகப் பரி­சோ­தித்­தது.

2009: ஸிம்­பாப்வே டொலரின் நாணய மதிப்பு மிகவும் வீழ்ச்­சி­ய­டைந்த நிலையில் ஸிம்­பாப்வே டொலர் பாவனையை அந்நாட்டு அரசு உத்தியோகபூர்வமாக கைவிட்டது. தற்போது அமெரிக்க டொலருடன் பிரித்தானிய, இந்திய, சீன, தென் ஆபிரிக்க நாணயங்கள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo