பாடகிகளின் ஒருபாலின உறவு அம்பலமான பரபரப்பின் பின்னரும் ‘ஸ்பைஸ் கேர்ள்ஸ் இசைக்குழுவின் மீள் இணைவு இசைச் சுற்றுலா திட்டமிட்டபடி நடைபெறும்’

0 198

பிரிட்­டனின் புகழ்­பெற்ற மகளிர் இசைக்­கு­ழு­வான ‘ஸ்பைஸ் கேர்ள்ஸ்’ குழுவின் பாட­கிகள் இருவர் பல வரு­டங்கள் ­ஒரு பாலின உறவில் ஈடு­பட்­ட­தாக வெளி­யான செய்தி பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனினும், அக்­கு­ழு­வி­னரின் மீள் இணைவு இசைச் சுற்­றுலா திட்­ட­மிட்­ட­படி தொடரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மெலனி பிரவுண், ஜெரி ஹலிவெல்

 

1994 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட ஸ்பைஸ் கேர்ள்ஸ் இசைக்­கு­ழுவில் பெண்கள் மாத்­தி­ரமே பாடல்­களைப் பாடினர். மெலனி பிரவுண் (ஸ்கேறி ஸ்பைஸ்–மெல் பீ), மெலனி சிசோம் (ஸ்போர்ட்டி ஸ்பைஸ்) எம்மா பன்டன் (பேபி ஸ்பைஸ்) ஜெரி ஹலிவெல் (ஜிஞ்சர் ஸ்பைஸ்) விக்­டோ­ரியா பெக்காம் (போஸ் ஸ்பைஸ்) ஆகியோர் இக்­கு­ழுவின் பாட­கி­க­ளாக விளங்­கினர்.

1996 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட இந்த இசைக்­கு­ழுவின் முதல் அல்­ப­மான ஸ்பைஸ் பொப் அல்­பத்தின் 3.1 கோடி பிர­திகள் விற்­ப­னை­யா­கின. உல­க­ளா­விய ரீதியில் மகளிர் இசைக்­கு­ழு­வொன்றின் அல்­பங்­களில் மிக அதி­க­மான பிர­திகள் விற்­ப­னை­யா­கிய அல்பம் இதுவே.

பீட்டில்ஸ் இசைக்­கு­ழு­வுக்குப் பின்னர் மிக வெற்­றி­க­ர­மான பிரித்­தா­னிய இசைக்­குழு ஸ்பைஸ் கேர்ள்ஸ் தான்.சில வரு­டங்­களாக செயற்­ப­டா­ம­லி­ருந்த இந்த இசைக்­குழு பின்னர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் இணைந்து, 2008 ஆம் ஆண்­டு­வரை செயற்­பட்­டது.

அதன்பின் லண்டன் ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்­காக இவர்கள் மீண்டும் இணைந்­தனர்.2008 ஆம் ஆண்­டுக்குப் பின் ஸ்பைஸ் கேர்ள்ஸ் இசைக்­கு­ழுவின் இசைச் சுற்­று­லா­வுக்­கான ஏற்­பா­டுகள் தற்­போது நடை­பெ­று­கின்­றன.

போஷ் ஸ்பைஸ் என அழைக்­கப்­பட்­ட விக்­டோ­ரியா பெக்காம் மாத்­திரம் இதில் பங்­கு­பற்ற மாட்டார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இந்­நி­லையில், கடந்த மாதம் பிரித்­தா­னிய தொலைக்­காட்­சி­யொன்றின் குட்­மோர்னிங் பிரிட்டன் நிகழ்ச்­சியில் பங்­கு­பற்­றிய பாடகி மெல் பீ (மெலனி பிரவுண்), 1990களில் இந்த இசைக்­குழு புகழின் உச்­சத்தில் இருந்த காலத்தில் தானும் பாடகி ஜெரி ஹாலி­வெலும் ஒரு­நாள்­ இ­ரவு ஒரு பாலின உறவில் ஈடு­பட்­ட­தாக கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார்.

ஸ்பைஸ் கேர்ள்ஸ்’ குழுவின் பாட­கிகள்

 

‘இதை கூறு­வ­தற்­காக ஜெரி என்னை வெறுக்­கக்­கூடும். ஏனெனில் அவர் தற்­போது வீட்டில் ஆடம்பரமாக வாழ்­கிறார். ஆனால். அச்சம்­பவம் நடந்­தது உண்மை’ என மெல் பீ கூறினார்.நீங்கள் ஜெரி­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­டீர்­களா என அவரை செவ்வி கண்ட பியர்ஸ் மோர்கன் கேட்­ட­போதே மெல் பீ அவ்­வாறு கூறினார்.

தற்போதைய அங்கத்தவர்கள்

மெல் பீயும் ஜெரியும் பாலியல் உறவில் ஈடு­பட்­டனர் என 1990களி­லேயே அர­சல்­பு­ர­லாக பேசப்­பட்­டது. அதன் அடிப்­ப­டை­யி­லேயே மெல் பீயிடம் அக்­கேள்­வியை ஸ்பைர்ஸ் மோர்கன் கேட்டார்.இது திட்­ட­மிட்டு நடந்­த­தல்ல, தற்­செ­ய­லாக நடந்­தது எனவும் அவர் தெரித்தார். இதை கூறு­வ­தற்­காக ஜெரியும் அவரின் கண­வரும் என்னை கொல்ல நினைக்க்­கூடும் எனவும் மெல் பீ வேடிக்­கை­யாக கூறினார்.

இச்­செவ்­வியின் பின்னர், தானும் மெல் பீயும் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக கூறப்­ப­டு­வதை ஜெரி ஹாலிவெல் நிரா­க­ரித்தார். அத்­த­கவல் வேத­னை­யா­னது எனவும் அவர் கூறினார்.

இந்த சர்ச்­சை­யினால் ஸ்பைஸ் கேர்ள்ஸ்­கு­ழுவின் உல­க­ளா­விய இசைச் சுற்­றுலா ரத்துச் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கின.

பிரிட்­டனில் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் 15 ஆம் திக­தி­வரை நடத்தத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள நிகழ்ச்­சி­களை ஒப்­பந்­தங்கள் கார­ண­மாக, இரத்துச் செய்ய முடி­யா­துள்­ள­தா­கவும், ஆனால், ஏனைய நாடு­களில் நடத்தத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

எனினும், உலகளாவிய இசைச் சுற்றுலா திட்டமிட்டபடி நடைபெறும் என ஸ்பேஸ் கேர்ள்ஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான ஒத்திகைகள் மற்றும் ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo