இந்திய, பாக். சமாதானத்துக்காக ‘ராப்’ பாடல் பாடிய பாகிஸ்தானியப் பாடகிகள் (Video)

0 467

பாகிஸ்­தானின் பிர­பல நடி­கை­களும் பாட­கி­க­ளு­மான புஷ்ரா அன்­சா­ரியும் அஸ்மா அப்­பாஸும் இந்­திய, பாகிஸ்தான் சமா­தா­னத்தை வலி­யு­றுத்தும் “ராப்” பாடல் ஒன்றை வெளியிட்­டுள்­ளனர்.

62 வய­தான புஷ்ரா அன்­சாரி பல தசாப்­தங்­க­ளாக பாகிஸ்­தானின் தொலைக்­காட்சித் தொடர்­களில் நடித்து வரு­பவர். திரைப்­ப­டங்­க­ளிலும் அவர் நடித்­துள்ளார். சிறந்த பாட­கி­யா­கவும் விளங்கும் அவர், இசைத்­து­றையில் பாகிஸ்தான் ஜனா­தி­பதி விருது உட்­பட பல விரு­து­களை வென்­றுள்ளார்.

அவரின் இளைய சகோ­த­ரி­யான அஸ்மா அப்­பாஸும் நடி­கை­யா­கவும் பாட­கி­யா­கவும் விளங்­கு­கிறார். 59 வய­தான அஸ்மா அப்­பாஸும் ஏரா­ள­மான தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் சில திரைப்­ப­டங்­க­ளிலும் நடித்­தவர்.இவர்கள் இரு­வரும் இந்­தியா மற்றும் பாகிஸ்தான் நாடு­க­ளுக்கு இடையில் சமா­தா­னத்தை வலி­யு­றுத்தும் ராப் பாடலை பாடி­ய­துடன் பாடல்­வீ­டி­யோ­விலும் தோன்­றி­யுள்­ளனர்.

“ஹம்­சாயே மா ஜாயே” எனும் இப்­பா­டலை புஷ்ரா, அஸ்மா ஆகி­யோரின் மற்­றொரு சகோ­த­ரி­யான நீலம் அஹமத் பஷீர் எழு­தி­யுள்ளார். இவர்கள் மூவரும் பாகிஸ்­தானின் மறைந்த ஊட­க­வி­ய­லா­ளரும் திரைப்­பட இயக்­கு­ந­ரு­மான அஹ்மத் பஷீரின் புதல்­விகள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­பாடல் வீடி­யோவில் புஷ்ரா அன்­சாரி இந்­தியப் பெண்­ணாக நடித்­துள்ளார். அஸ்மா அப்பாஸ் பாகிஸ்­தா­னியப் பெண்­ணாக நடித்­துள்ளார். ஒரு சுவரின் இரு புறங்­க­ளிலும் வசிக்கும் பெண்­க­ளாக புஷ்­ராவும் அஸ்­மாவும் நடித்­துள்­ளனர்.

இந்­தி­யா­விலும் பாகிஸ்­தா­னிலும் வசிக்கும் சாதா­ரண மக்கள் சமா­தா­னத்தை விரும்­பு­வ­தா­கவும் ஆனால், அர­சி­யலும் போர் வேட்­கையும் இம்­மக்­களை பிரிப்பதாகவும் இப்பாடலில் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

இப்­பாடல் வீடி­யோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!