விண்வெளியின் கருந்துளைகள் முதல் தடவையாக படம்பிடிக்கப்பட்டன 

0 496

விண்வெளியின் பால்வீதியிலுள்ள கருந்துளைகளை (Black hole) முதல் தடவையாக படம்பிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

பிடிக்கப்பட்ட புகைப்படத்தையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கருந்துகளைகள் பற்றிய சித்தாந்தம் கற்கனையல்ல என்பதை நிரூபிப்பதாக இச்சாதனை அமைந்துள்ளது.

ஐரோப்பிய தெற்கு விண்வெளி அவதானிப்பு நிலையம் வெளியிட்ட கருந்துளை புகைப்படம்:


எமது சூரியக் குடும்பம் உட்பட ஒட்டுமொத்த அண்டத்தையும் தனது ஈர்ப்பு சக்தியால் விழுங்கிவிடும் வல்லமை பெற்றவை கருந்துளை. இதுகுறித்து வானியல் அறிஞர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முதல்முறையாக கருந்துளையை புகைப்படம் எடுத்து, அதனை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதுவும் இரு கருந்துகளைகளை படம்பிடித்துள்ளனர். இது விண்வெளி குறித்த ஆய்வில் மைல்கல் ஆகும்..

26,000 ஒளியாண்டுதொலைவில் உள்ள சஜிடேரியஸ்A*  மற்றும் 6 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள M87 எனும் கெலக்சியின் மீ ராட்சச கருந்துளை ஆகியவற்றை புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளோம் என அறிவித்துள்ளனர்.

கருந்துளையின் படமும் வெளியிடபபட்டுள்ளது. கருந்துகளை படம்பிடிக்கப்பட்டதால் விஞ்ஞானிகளும் விண்வெளி ஆய்வாரள்களும் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!