தங்கை குஷி கபூரும் பொலிவூட்டில் களமிறங்க ஆர்வம்; நடிகை ஜான்வி கபூர்

0 118

தனது இளைய சகோ­தரி குஷி கபூரும் பொலிவூட் நடி­கை­யா­கு­வ­தற்கு ஆர்வம் கொண்­டுள்ளார் என நடிகை ஜான்வி கபூர் தெரி­வித்­துள்ளார்.மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயா­ரிப்­பாளர் போனி கபூரின் மகள்­க­ளான இவ்­வி­ரு­வரும் சினிமா நடி­கை­க­ளா­குவர் என நீண்­ட­கா­ல­மாக எதிர்­பார்க்­கப்­பட்டு வந்­தது.

இவர்­களில் மூத்­த­வ­ரான ஜான்வி கபூர் கடந்த வருடம் வெளியான தடாக் திரைப்­ப­டத்தின் மூலம் பொலிவூட் நடி­கை­யாக அறி­மு­க­மானார்.

இந்­நி­லையில், தனது தங்கை குஷி கபூரும் பொலிவூட் நடி­கையா­கு­வதில் ஆர்வம் கொண்­டுள்ளார் என ஜான்வி கபூர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

பெஷன் மொட­லாக பணி­யாற்­று­வ­தற்கு குஷி கபூர் முன்னர் விரும்­பினார் எனவும் தற்­போது, அவர் நடி­கை­யா­கு­வ­தற்கு விரும்­பு­கிறார் எனவும் ஜான்வி கபூர் தெரி­வித்தார்.

நியூயோர்க் திரைப்­படக் கல்­லூ­ரியில் கல்வி கற்­ப­தற்கு குஷி திட்­ட­மிட்­டுள்ளார்.

அக்­கற்கை நெறியை பூர்த்தி செய்து திரும்பி வந்த பின்னர், அவர் தான் என்ன செய்ய வேண்டும் என்­பதை தீர்­மா­னிப்பார் எனவும் ஜான்வி கபூர் கூறினார்.

இதே­வேளை. “எனக்கும் தங்­கைக்கும் இடையில் போட்டி எதுவும் இல்லை. எமது ஆடை­க­ளையும் நாம் பரி­மா­றிக்­கொள்வோம். ஆனால், எனது ஆடை­களை என்­னிடம் சொல்­லாமல் அவர் எடுத்­துக்­கொண்டால் மாத்திரம் நான் குழப்பமடைந்துவிடுவேன்” எனவும் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo