தென் சூடான் தலைவர்களின் பாதங்களில் முத்தமிட்ட பாப்பரசர் பிரான்சிஸ்

மீண்டும் யுத்தத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கோரினார்

0 147

  

தென் சூடான் தலைவர்களின் பாதங்களில் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் முத்தமிட்டு, மீண்டும் யுத்தத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கோரியுள்ளார்.

வத்திகானில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில், தென் சூடான் தலைவர்களின் பாதங்களில் பாப்பரசர் முத்தமிட்டார்.

 

மீண்டும் யுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என தென் சூடான் ஜனாதிபதி சல்வா கீர், மற்றும் அவரின் முன்னாள் உப ஜனாதிபதியும் தற்போதைய கிளர்ச்சித் தலைவருமான ரீக் மச்சார், மற்றும் 3 உப ஜனாதிபதிகளிடம் பாப்பரசர் கோரினார்.

தென் சூடானில் ஐக்கிய அரசாங்கம் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் பல தரப்பினரின் முரண்பாடுகளை நீக்கும் முயற்சியாக, தென் சூடான் தலைவர்கள் பலர் வத்திகானிலுள்ள பாப்பரசரின் வாசஸ்தலத்துக்கு நேற்று அழைக்கப்பட்டு பிரார்த்தனைகள் மற்றும் போதனைகள் 24 மணித்தியாலங்களாக நடைபெற்றன.

இதன்போது. தென் சூடான் தலைவர்களின் பாதங்களை, 82 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் முழந்தாளிட்டு முத்தமிட்டு, அவர்கள் மீண்டும் யுத்தத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கோரினார்.

சூடானிடமிருந்து 2011 ஆம் ஆண்டு தென் சூடான் சுதந்திரம் பெற்றது. எனினும், 2 வருடங்களின் பின்னர், உப ஜனாதிபதி ரீக் மச்சாரை ஜனாதிபதி கீர் சல்வா நீக்கியதையடுத்து அங்கு உள்நாட்டு யுத்தம் மூண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo