நடிகர் ஜே.கே. ரித்தீஷ்(46) மாரடைப்பால் மரணம்

0 245

தமிழ் சினிமா நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

46 வயதான , 2009 ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
‘சின்னபுள்ள’ படத்தில் அறிமுகமான இவர் ‘நாயகன்’ என்ற படத்தைத் தயாரித்து தானே ஹீரோவாகவும் நடித்தார்..

2014 ஆம் ஆண்டு அதிமுகவில் ரித்தீஷ் இணைந்தார்;. இன்று காலை ராமநாதபுரத்தஉள்ள போகளூரில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக அவரை ராமநாதபுரத்தில் உள்ள பரணிகுமார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவருக்கு கடுமையான மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது ஜே.கே.ரித்தீஷ் உடல் ராமநாதபுரம் சேதுபதி நகரிலுள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo