‘சூடானில் 2 வருடகாலத்துக்குள் பொதுமக்கள் ஆட்சி’: புதிய இராணுவ ஆட்சியாளர் தெரிவிப்பு

0 119

சூடானில் அதிகபட்சமாக 2 வருட காலத்துக்கு இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்படும் எனவும் அதன்பின் பொதுமக்கள் ஆட்சி ஏற்படுத்தப்படும் என சூடானின் இராணுவப் பேரவை தெரிவித்துள்ளது.

சூடானில் 30 வருடங்களாக ஆட்சியிலிருந்த ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அந்நாட்டு இராணுவத்தினரால் ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
எனினும், இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சூடானின் புதிய இராணுவ ஆட்சியாளரான பாதுகாப்பு அமைச்சர் அவாத் பின் அவ் வெள்ளிக்கிழமை இராஜினாமா செய்தார். நாட்டின் புதிய ஆட்சியாளராக லெப். ஜெனரல் அப்தெல் ஃபதாஹ் அப்தெல்ரஹ்மான் புர்ஹான் இராணுவப் பேரவையினால் நியமிக்கப்பட்டார்.

புதிய ஆட்சியாளர் லெப். ஜெனரல் அப்தெல் ஃபதாஹ் அப்தெல்ரஹ்மான் புர்ஹான்


எனினும், மக்கள் தற்போது பொதுமக்கள் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிகபட்சமாக 2 வருட காலத்துக்கான இடைக்கால அரசாங்கம் பதவயிலிருக்கும் எனவும், அதன்பின் பொதுமக்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்படும் எனவும் புதிய ஆட்சியாளரான லெப். ஜெனரல் அப்தெல் ஃபதாஹ் அப்தெல்ரஹ்மான் புர்ஹான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சூடானின் தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவைகள் பிரிவின் தலைவரான ஜெனரல் சாலிஹ் கோஸ் இராஜினாமா செய்துள்ளார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இராஜினாமாவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இவர், சூடானிய பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி ஒமர் அல் பஷிPர் சகிதம்ஃ போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம்சுமத்தப்பட்ட சூடானிய தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo