பறவை தாக்கியதால் மனிதர் பலி

0 228

பறவையொன்று தாக்கியதால் 75 வயதான நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில்இடம்பெற்றுள்ளது.

கெசோவரி (cassowary) எனும் நியூகினித் தீக்கினி இனப் பறவையொன்று தாக்கியதாலேயே அவர் உயிரிழந்தார்.

75 வயதான மேர்வின் ஹஜோஸ் எனும் இந்நபர், வளர்த்து வந்த கெசோவரி பறவை நேற்று அவரைத் தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேர்வின் ஹஜோஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கெசோவரி பறவைகள் பறப்பதில்லை. ஆனால், மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓடக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo