அப்துல்லாவையும் முப்தியையும் காஷ்மீரிலிருந்து துரத்தியடிக்க வேண்டும்: மோடி காட்டம்!

0 363

ஜம்மு காஷ்மீரை 3 தலைமுறைகளாக ஆண்டுவரும் அப்துல்லா குடும்பத்தாரையும், முப்தி குடும்பத்தாரையும் தேசத்தைத் துண்டாட நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா தங்கள் மாநிலத்துக்கு தனியாக பிரதமர் தேவை என்று கோரிக்கை எழுப்பியிருந்தார். அதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி காட்டமாகப் பேசினார்.

ஜம்மு காஷ்மீரின் கதுவா நகரில் இன்று (14) பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைக் கடந்த 3 தலைமுறைகளாக அப்துல்லா, முப்தி குடும்பத்தாரும் ஆண்டுவிட்டார்கள். மூன்று தலைமுறைகளாக மாநிலத்தைச் சுரண்டிவிட்டார்கள். மாநிலத்தின் எதிர்காலம் கருதி, அவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இவர்களைத் தோற்கடித்தால்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பான எதிர்காலம் அமையும்.

ஒட்டுமொத்த குடும்பத்தாரையும் அரசியலுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். அவர்களின் நோக்கம் நாட்டைத் துண்டாடவேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

மாநிலத்தில் நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள். இந்த அதிகமான வாக்குப்பதிவின்  மூலம் தீவிரவாதத் தலைவர்கள், சந்தர்ப்பவாதிகள், எதிர்க்கட்சிகள் அனைவரும் அச்சமடைந்திருக்கிறார்கள். முதல்கட்ட வாக்குப்பதிவில் மாநில மக்கள் ஜனநாயகத்தின் வலிமையை நிரூபித்துவிட்டார்கள் என்றார்.(M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo