நேபாளத்தில் விமானமும் ஹெலியும் மோதல்! மூவர் பலி

0 186

நேபாளத்தில் சிறிய விமானமொன்றும் ஹெலிகொப்டர் ஒன்றும் மோதிக்கொண்டதால் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகிலுள்ள லுக்லா விமான நிலையத்தில் இன்று  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


விமானமும் ஹெலிகொப்டரும் மேற்படி விமான நிலையத்திலிருந்து மேலே கிளம்ப முற்பட்டபோது, ஓடுபாதையில் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

லுக்லா விமான நிலையமானது எவரெஸ்ட் பிராந்தியத்துக்கான பிரதான நுழைவாயிலாக கருதப்படுகிறது.
மேற்படி விமானத்தின் துணை விமானி மற்றும் தரையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!