தனது அரைநிர்வாண படத்தை மாணவனுக்கு அனுப்பிய ஆசிரியை!

0 759

அமெரிக்காவைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவனுக்கு தனது அரைநிர்வாண புகைப்படத்தை அனுப்பிய ஆசிரியை ஒருவர்  பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எனினும், தனது காதலனுக்கு அனுப்ப முற்பட்ட படத்தை தவறுதலாகவே மாணவனுக்கு அனுப்பியதாகக் கூறும் மேற்படி ஆசிரியை, பாடசாலை நிர்வாகத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தள்ளர்.

25 வயதான லொறீன் மிராண்டா எனும் யுவதி, நியூயோர்க்கிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர்.

இவர் தனது ‘டொப்லெஸ்’ புகைப்படத்தை, பாடசாலை மாணவன் ஒருவனுக்கு அனுப்பியமை சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து மேற்படி ஆசிரியை கடந்த மாத இறுதியில் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆனால், தான் வேண்டுமென்று மாணவனுக்கு அப்புகைப்படத்தை அனுப்பவில்லை என லொறீன் கூறுகிறார். தனது காதலனுக்கு அப்படத்தை அனுப்ப முற்பட்டதாகவும், தவறுதலாக மேற்படி மாணவனுக்கு அதை அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், தன்னை பணியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக பாடசாலை நிர்வாகத்தின் மீது லொறீன் மிரண்டா வழக்குத் தொடுத்துள்ளார்.

தனது சட்டத்தரணியுடன் நடத்திய செய்தியாளர் மாநாடொன்றையும் லொறீன் மிரண்டா நடத்தினார். பாடசாலை நிர்வாகத்திடம் 42 இலட்சம் டொலர் நஷ்ட ஈடு கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.(M01)

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!