உலக கிண்ண ஆஸி குழாத்தில் வோர்ணர், ஸ்மித்

0 162

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உபதலைவர் டேவிட் வோர்ணர் ஆகியோர் உலக கிண்ண சுற்றுப்போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கான 12 மாத காலத் தடை முடிவடைந்த நிலையில் இவர்கள் மீண்டும் அவுஸ்திரேலிய குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த துடுப்பாட்ட வீரர் கெமரோன் பன்க்ரொவ்ட் 9 மாத தடை முடிடைந்தபின் கடந்த டிசெம்பர் மாதம் அணியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஸ்மித்தும் டேவிட் வோர்ணரும் மீண்டும் அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெறுவது மகிழ்ச்சிகரமானது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் ட்ரோவர் ஹோன்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் உபதலைவர் ஜோஸ் ஹஸ்ல்வூட், கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது தனது முதல் ஒருநாள் சதத்தைக் குவித்த பீட்டர் ஹேன்ட்கோம்ப் ஆகியேர் இக்குழாத்தில் இடம்பெறவில்லை.

அவுஸ்திரேலிய குழாம்: ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), உஸ்மான் கவாஜா, டேவிட் வோர்ணர், ஸ்டீவ் ஸ்மித், ஷோன் மார்ஷ், கிளென் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கெறி, பட் கம்மின்ஸ், மிஷெல் ஸ்டார்க், ஜே ரிச்சர்ட்ஸன், நேதன் கோட்லர் நீல், ஜேசன் பெரென்ட்ரோவ், நேதன் லியோன், அடம் ஸம்பா.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!