இனவாத உரை: யோகி ஆதியநாத்துக்கு 3 நாள் தடை! மாயாவதிக்கு 2 நாள் தடை

0 135

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதியநாத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு 72 மணித்தியால தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாயாவதிக்கு 48 மணித்தியால தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யோகி ஆதியநாத்தும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாயாவதியும் தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதமாக உரையாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இதனால், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இந்திய தேர்தல்கள் ஆணையகத்தினால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo