உலக கிண்ண சுற்றுப்போட்டிக்கான இந்திய குழாம் அறிவிப்பு

0 207

உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான இந்திய குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர கொண்ட இக்குழாமில், 5 விசேட துடுப்பாட்ட வீரர்கள், 2 விக்கெட் காப்பாளர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 சகல துறை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

குழாமில் இரண்டாவது விக்கெட் காப்பாளராக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாஹி (எம்.எஸ்.தோனி) காயமடைந்தால் மாத்திரமே இரண்டாவது விக்கெட் காப்பாளர் விளையாட வருவார். இந்நிலையில், அனுபவத்தை கருத்திற்கொண்டு, ரிஷாபா பாந்த்துக்குப் பதிலாக கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார் என தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அறிவித்துள்ளார்.

இந்திய குழாம்.:

விராத் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா (உப தலைவர்) ஷிகார் தவான், கே.எல். ராகுல், விஜய் சங்கர், மஹேந்திர சிங் தோனி, (விக்கெட் காப்பாளர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திரா சஹால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பம்ரா, ஹர்தீக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மொஹம்மத் சமி.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!