உலகின் முதல் ஆயுதம்தாங்கிய ஈரூடக ட்ரோன் படகு: வெற்றிரமாக பரீட்சித்ததாக சீனா தெரிவிப்பு

0 546

உலகின் முதலாவது ஆயுதம் தாங்கிய ஈரூடக ட்ரோன் படகை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

மெரைன் லிஸர்ட் (Marine Lizard ) என பெயரிடப்பட்ட இந்த ட்ரோன் படகு 12 மீற்றர் (சுமார் 40 அடி) நீளமானதாகும்.

ஆளற்ற இந்த ட்ரோன் படகை, தரைவழித் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தக்கூடியது என சீன இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், ஏனைய வான்வழி மற்றும் ட்ரோன் கப்பல்களுடன் யுத்தத்தில் ஈடுபடக்கூடியது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த ட்ரோனின் அதிகபட்ச செயற்பாட்டு எல்லை 1200 கிலோமீற்றர்களாகும். இதை செய்மதி வழியாக தொலைவிலிருந்து இயக்க முடியும்.

தரையில் மணித்தியாலத்துக்கு 20 கிலோமீற்றர் வேகத்திலும் நீரில் 50 நொட்ஸ் வேகத்திலும் இந்த ட்ரோன் பயணிக்கக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!