தேர்தலில் வெல்வதற்காக அச்ச மனநிலையை பிஜேபி ஏற்படுத்துகிறது: மெஹ்பூபா முப்தி

0 95

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் அச்ச மனநிலையை பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) ஏற்படுத்துகிறது என ஜம்மு காஷ்மீரின், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மெஹ்பூபா முப்தி இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் மோராதாபாத் தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘புல்வாமாவில் அவர்கள் இரண்டாவது தடவையாக தவறிழைத்தபோது, நாம் அவர்களின் வீட்டுக்குள் புகுந்து வான் தாக்குதல் நடத்தினோம். மற்றொரு தவறு செய்தால் அதன் பின்விளைவுகளை பாகிஸ்தான் உணர்ந்துள்ளது’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையிலேயே, ‘எமது இராணுவத்தின் தியாகங்களை தவறாக கையாள்வதும் தேர்தல் தொகுதியின் முனைப்பாக்கமும் பிஜேபிக்கு உதவவில்லை. தற்போது பாலகோட் போன்ற மற்றொரு தாக்குதலுக்குத் தயாராகுவதற்காக அச்ச மனநிலையை பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்துகிறது’ என மெஹ்பூபா முப்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

59 வயதான மெஹ்பூபா முப்தி 2016 ஏப்ரல் முதல் 2018 ஜூன் வரை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக பதவி வகித்தார். பிஜேபியுடன் கூட்டணி அமைத்து அவர் ஆட்சி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

மெஹ்பூபா முப்தியின் வாகனத் தொடரணி மீது இன்று திங்கட்கிழமை கல்வீச்சு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் அனந்னாக் மாவட்டத்தல் இச்சம்பவம் இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo