வவுனியாவில் இளைஞர் குழு மோதல்: வாகனங்கள் சேதம். மூவர் கைது

0 135

                                                                                                           (கதீஷ்)

வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திக்கு அருகாமையில் இளைஞர் குழுக்கிடையில் இடம்பெற்ற  மோதலில்  இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திக்கு அருகாமையில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கார் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும்  சேதமாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில்   வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து   சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார் சேதமாக்கப்பட்ட இரு வாகனங்களையும் மீட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்துள்ளனர். மேலும் மூவரை தேடி வருவதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.(M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!