அழகுராணி போட்டியில் மனைவி; பாதிரியார் இடமாற்றம்

0 190

ரஷ்ய பழைமைவாத திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரின் மனைவி, அழகுராணி போட்டியில் பங்குபற்றியதால், அப்பாதிரியார் தூரப் பிரதேசமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் மக்னிடோகோர்ஸ்க் நகரைச் சேர்ந்த தேவாலயமொன்றில் பணியாற்றிய பாதிரியார் சேர்ஜி ஸடோவ் (31) என்பவரே இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளார்.

இப்பாதிரியாரின் மனைவியான ஒக்சானா ஸடோவா (32) அழகு சிகிச்சை நிலையமொன்றை நடத்தி வருபவர். இவர் அண்மையில் அழகுராணி போட்டியொன்றில் பங்குபற்றினார். அப்போட்டியில் மிஸ் செக்ஸுவாலிட்டி எனும் பரிசையும் இவர் வென்றார்.

இவர் பாதிரியார் ஒருவரின் மனைவி என்பது தெரியவந்ததையடுத்து. ரஷ்ய சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், பாதிரியார் சேர்ஜி ஸடோவை மக்னிடோகோர்ஸ் நகரிலிருந்து 65 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஃபெர்ஷாம்பெனுவாஸ் எனும் கிராமத்துக்கு ரஷ்ய பழைமைவாத திருச்சபை இடமாற்றியுள்ளது.

 

பாதிரியார் ஒருவரின் மனைவி உடலை காட்சிக்காக வெளிப்படுத்துவது பெரும் பாவம் என ஆயர் ஃபியேடர் சப்ரிகின் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo