வவுனியாவில் காயமடைந்த 110 பேருக்குச் சிகிச்சை: எண்மர் கைது!

0 179

                                                                                                                     (கதீஷ்)

புதுவருட காலத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுவருட தினமான நேற்று (14)  காலை 6 மணியிலிருந்து இன்று (15) நண்பகல் வரை இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேரே வவுனியா வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு, தாக்குதல் , குழுமோதல், வாள்வெட்டு, வாகன விபத்து என்பன காரணமாகவே காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  புதுவருட தினமான நேற்று காலை 6 மணியிலிருந்து நேற்றிரவு 12 மணிவரை 62 பேரும் இன்று அதிகாலை 12 மணியில் இருந்து நண்பகல் வரை 48 பேரும்   காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

காயமடைந்தவர்களில் சிறு காயங்களுக்குள்ளானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வரும் நிலையில் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும் வவுனியா போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.(M01)

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!