கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் கையெழுத்து வேட்டையில் மூவின மக்களும்!

0 385

                                                                                     (காரைதீவு  நிருபர் சகா)

 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு அரசாங்கத்தை கோரும் கையெழுத்து சேகரிப்பு நேற்று (14) கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றது. கல்முனை பிரதேச பொதுமக்கள், பொது அமைப்புகள்,  இளைஞர்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.  இந்தக் கையெழுத்து  வேட்டை  சேனைக்குடியிருப்பு காளி கோவில் முன்னபாகவும் பாண்டிருப்பு கடற்கரை திடலிலும் இடம்பெற்றது.

இந்த கையெழுத்து வேட்டையில்  மூவின மக்கள், மத குருக்களும்  கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். 

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தக் கோரும் குறித்த மனு எதிர்வரும் 21 ஆம் திகதி  தமிழ் உணர்வாளர்கள் அமைப்பால்   மட்டக்களப்பிலிருந்து  முன்னெடுக்கப்படும்  அமைதி நடைபவனி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு  22 ஆம் திகதி அம்பாறை அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.  (M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo