பாரிஸின் 850 வருட பழையமையான தேவாலயக் கட்டடம் தீக்கிரை

0 250

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘நொட்ர டாம் ‘ ‘தேவாலயத்தில்  (Notre-Dame Cathedral) பாரிய தீ பரவியுள்ளது

இக் கத்தோலிக்க தேவாலயததின் 850 வருட கால பழைமை வாய்ந்த கட்டடம் உள்ளூர் நேரப்படி திங்கள் மாலை தீப்பற்ற ஆரம்பித்தது.

இத்தீயை அணைப்பதற்கு தீயணைப்புப் படையினர் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  தீயினால் தேவாலயத்தின் உயர்ந்த கோபுரம் அழிந்துள்ளது.

இத்தீ எவ்வாறு மூண்டது என்பது அறியப்படவில்லை. ஆனால், தற்போது மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளுடன் இது சம்பந்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!