தரையிலிருந்து 220 கி.மீ. தொலைவில் கடலில் தத்தளித்த நாய் மீட்பு

0 162

தாய்லாந்தின் கரையோரத்திலிருந்து 220 கிலோமீற்றர் (135 மைல்) தூரத்தில் கடலில் தத்தளித்த நாய் ஒன்றை தாய்லாந்து எண்ணெய் அகழ்வு நிலைய ஊழியர்கள் மீட்டுள்ளனர்.

தாய்லாந்து வளைகுடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த நாய்  கண்டுபிடிக்கப்பட்டது.

தரையிலிருந்து இவ்வளவு தூரத்துக்கு இந்த நாய் எவ்வாறு சென்றது என்பது தெரியவில்லை. படகு ஒன்றிலிருந்து இந்த நாய் வீழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கடலில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் அகழ்வு நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்களால் இந்த மீட்கப்பட்டது.

நேற்று காலை படகு மூலம் இந்த நாய் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வோட்ச்டோக் தாய்லாண்ட் (WATCHDOG THAILAND ) எனும் அமைப்பினாலும் மிருக வைத்தியர்களாலும் இந்த நாய் வரவேற்கப்பட்டது.

வீடியோ

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo