யாழ். கீரிமலையில் கத்தி, கைக்கோடரி, பணத்துடன் நால்வர் கைது!

0 87

                                                                                                              (மயூரன்)
யாழ்.கீரிமலை பகுதியில் கத்தி, கைக்கோடரி என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை பகுதியில் நேற்று (15) சந்தேகத்துக்கிடமான முறையில் சிலர் நடமாடுவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியில் சந்தேகத்துக்கிடான முறையில் கூடி நின்ற நால்வரை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 3 கத்தி, கைக்கோடரி, சுத்தியல் என்பவற்றுடன் 19ஆயிரத்து 500 ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து நால்வரையும் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிவான் அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். (M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!