கலேவெலவில் தம்பதியினர் வெட்டிக் கொலை!

0 322

                                                                        (எம். எஸ். முஸப்பிர், செங்கடகல நிருபர்)
கலேவெல தேவஹூவ எகேஎல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட கணவன், மனைவி ஆகியோரது சடலங்களை மீட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. 53 வயதுடைய நபரும் 52 வயதான அவரது மனைவியுமே கொலை செய்யப்பட்டவர்களாவர்.

காணிப் பிரச்சினை காரணமாகவே இந்தப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டிலிருந்த தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைய கலேவெவ பொலிஸார் அங்கு சென்று சடலங்களை மீட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.(M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!