தேவாலய புனரமைப்புக்காக 1,975 கோடி ரூபாவை வழங்கும் கோடீஸ்வரர்

0 875

பாரிய தீயினால் சேதமடைந்த, பாரிஸ் நகரிலுள்ள நோட்ரே டாம்  தேவாலயக் கட்டடத்தை புனரமைப்புதற்கு 100 மில்லியன் யூரோ (சுமார் 1975 கோடி ரூபா) வழங்குவதற்கு பிரான்ஸை சேர்ந்த கோடீஸ்வரர் பிராங்சுவா ஹென்றி பினோல்ட் முன்வந்துள்ளார்.

நோட்ரே டாம் தேவாலய புனரமைப்புக்கான பங்களிப்பாக தானும் தனது தந்தை பிராங்சுவா பினோல்ட்டும் தமது குடும்ப நிறுவனமொன்றிலிருந்து 100 மில்லியன் யூரோக்களை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளோம் என பிராங்சுவா ஹென்றி பினோல்ட் தெரிவித்துள்ளார்.

மனைவி சல்மா ஹாயெக்குடன் பிராங்சுவா ஹென்றி பினோல்ட்


56 வயதான பிராங்சுவா ஹென்றி பினோல்ட், பிரபல ஹொலிவூட் நடிகை சல்மா ஹாயெக்கின் கணவர் ஆவார்.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள 850 வருட பழைமையான நோட்ரே டாம் தேவாலயம் நேற்று பரவிய தீயினால் பெரும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!