அக்கரைப்பற்று கூட்டுறவுச் சங்க பொதுச் சபைக் கூட்டத்தில் தண்ணீர் போத்தல் வீச்சு!

0 910

                                                                                     (அக்கரைப்பற்று நிருபர்)
அக்கரைப்பற்று மத்திய பலநோக்குக் கூட்டுறவுச் சங்க விசேட பொதுச்சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை காலை சங்கத்தின் கேட்போர் கூடத்தில் தலைவர் எம்.ஐ.எம்.றபீக் தலைமையில் நடைபெற்றபோது தீர்மானம் எதுவுமின்றி அமளி துமளியில் கூட்டம் முடிவடைந்தது.
அக்கரைப்பற்று பிரதான வீதியில் கொமஸியல் வங்கிக்கு அருகில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான காணியில் தபால் அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தபாலக கட்டிடத்துக்கு அக்காணித்துண்டை அன்பளிப்பாக வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாக ஆராயும் நோக்கில் பிரேரணை ஒன்றை கூட்டுறவு சங்க பணிப்பாளர் சபையினர் விசேட பொதுச்சபை கூட்டத்தில முன்வைத்த போது பொதுச்சபை உறுப்பினர்கள் பலர் காணியை அன்பளிப்பாக வழங்குவதற்கு பலத்த எதிர்ப்பை வெளியிட்டு அதற்காக வாடகை அறவிடபட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதன்போது பொதுச்சபை உறுப்பினர் ஊடகவியலாளர் மீரா இஸ்ஸடீன் கூட்டுறவுச் சங்க காணியை அன்பளிப்பாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கான நியாயங்களை முன்வைத்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் மீது பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தண்ணீர் போத்தலினால் எறிந்தார் அதனையடுத்து கூட்டத்தில் கூச்சல் கூழப்பம் எற்பட்டு அமைதியின்மை எற்பட்டது.அதனை தொடர்ந்து தீர்மானம் எதுவுமின்றி கூட்டம் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். ஜூனைடீன், தலைமையக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம்.ஜலால்டீன்,கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜனார்த்தனா, அக்கரைப்பற்று கூட்டுறவு சங்க பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள், பொது முகாமையாளர் எம்.எஸ்.எம்.நஜீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  (M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!