5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை!

0 133

                                                                                                                                              (எம்.மனோசித்ரா)

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலேயே   இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த பிரதேசங்களில் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் 100 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதே வேளை நாட்டின் ஏனைய சில பிரதேசங்களில்   நாளையும் (17) நாளை மறு தினமும்  (18) தொடர்ந்தும் வெப்ப காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வட- மத்திய மாகாணத்திலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் நாளையும் (17) அதிக வெப்பநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (M10)

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!