தாயின் வயிற்றுக்குள் சண்டைபோடும் குழந்தைகள் – வைரல் வீடியோ!

0 897

எவ்வளவு வயதானாலும் அக்கா தங்கை சண்டை அனைவர் வீட்டுலயும் நடக்கறதுதானே என்கிறீர்களா? இங்கேயும் அக்கா தங்கச்சி சண்டைதான். ஆனால், பிறப்பதற்கு முன்னாலேயே தாயின் வயிற்றுக்குள் சண்டை போட்டதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சர்ய விஷயம்!

சீனாவைச் சேர்ந்த டவோதான் இந்த அதிசயக் குழந்தைகளுக்கு அப்பா. 28 வயதான இவர்தான் அல்ட்ராஸ்கேனில் குழந்தைகள் சண்டைப் போடுவதை வீடியோ எடுத்திருக்கிறார். இந்த வீடியோ அந்த குழந்தைகள் நான்கு மாதம் இருந்தபோது எடுக்கப்பட்டது.

சென்ற வருடம் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை டோயின் என்ற வீடியோ ஆப்பில் பதிவேற்றிய டவோவுக்கு பிறக்காத தனது குழந்தைகள் உலக லெவலுக்கு புகழடைய வைக்கும் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.

தற்போது வரை இந்த வீடியோவை சுமார் இரண்டரைக் கோடிபேர் பார்த்திருக்கிறார்கள். 80,000 பேர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். இந்தக் இரட்டையர்களை மொ-மொ ட்வின்ஸ் என்று கூறுகிறார்கள். இந்த வகை இரட்டையர்களில் இரண்டுபேரும் பிழைப்பது மிகவும் கடினமாம். சுமார் 60 ஆயிரம் கருவுற்ற பெண்களில் ஒருவருக்குத்தான் இரு குழந்தைகளும் பிறக்க வாய்ப்பிருக்கிறதாம்.

அதிர்ஷ்டவசமாக டவோவின் மனைவி அந்த 60 ஆயிரத்தில் ஒருவராக இருந்துள்ளார். ஆம், கடந்த வாரம் இரண்டு குட்டீஸ்களும் ஆரோக்கியமான முறையில் பிறந்திருக்கிறது. அவர்களுக்கு செர்ரி, ஸ்ட்ராபெரி என பெயரிட்டுள்ளனார் இந்தத் தம்பதியர்.  இந்தக் குழந்தைகள் வயிற்றில் சண்டை மட்டும்போடவில்லை, கடந்த ஜனவரியில் மீண்டும் குழந்தைகளைப் பார்த்தபோது இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்திருக்கின்றனர்.

பிறக்கும்போதே இவ்வளவு ஃ(F) பேமஸாக பிறந்த என் குழந்தைகளை நினைத்து பெருமையாக இருக்கிறது. அதனைவிட அவர்கள் கருவிலேயே சண்டை போடுவது கட்டிப்பிடித்துக் கொள்வது என ஒருவருக்கொருவர் மிகவும் பிணைப்போடு இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம் என சீனாவில் உள்ள செய்தித்தாள் ஒன்றில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். (M01) (timesnownews.com)

வீடியோ

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!