Tik Tok app  கூகுளினால் இந்தியாவில் தடுக்கப்பட்டது: நீதிமன்ற உத்தரவையடுத்து நடவடிக்கை

0 16,087

பிரசித்தி பெற்ற டிக் டொக் செயலியை (Tik Tok app) இந்தியாவில் கூகுள் நிறுவனம் தடைசெய்துள்ளது.

டிக் டொக் மீதான தடையை நீக்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் (ஹைகோர்ட்) மறுப்புத் தெரியவித்தையடுத்து, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிக் டொக் செயலிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமானது, டிக் டொக் வீடியோ தடைசெய்யுமாறு இந்திய மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது.

டிக் டொக் வீடியோவானது ஆபாசப்படங்களை (போர்னோகிறப்பி) ஊக்குவிப்பதாகவும், அதை பயன்படுத்தும் சிறார்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் இதற்கு காரணம் கூறப்பட்டது.

இத்தடையை நீக்குமாறு சீனாவைச் சேர்ந்த ‘பைட்டான்ஸ் டெக்னாலஜி’ நிறுவனம் கோரியிருந்தது. இக்கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது,

டிக் டொக் செயலியை தடை செய்யுமாறு கூகுள் மற்றும் அப்பிள் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் கடிதம் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை முதல் டிக் டொக் செயலியை கூகுள் தடுத்துள்ளது.  இந்தியாவில் சுமார் 24 கோடி தடவைகள் டிக் டொக் செயலி தரவிறக்கம் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!