‘ஆபாச நடனமாடிய’ ரஷ்ய பெல்லி டான்ஸருக்கு எகிப்தில் 12 மாத சிறை

0 686

எகிப்தில் இரவு விடுதியொன்றில் ஆபாச நடனமாடிய குற்றச்சாட்டில் ரஷ்ய நடனத் தாரகை ஒருவருக்கு எகிப்திய நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த எக்கெத்தரினா ஆண்ட்ரீவா எனும் யுவதிக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது. 31 வயதான எக்கெத்தரினா ஆண்ட்ரியவா, ‘பெல்லி டான்ஸ்’ கலைஞர் ஆவார்.

இவர் நைல் நதியில் பயணிக்கும் படகொன்றில் இயங்கும் இரவு விடுதியொன்றில் ஆபாசமாக நடனமாடினார் என குற்றம் சுமத்தப்பட்டது. இவர் உள்ளாடை அணியாமல் நடனமாடினார் எனவும் அனுமதிப்பத்திரம்னிறி பணியாற்றினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.

மேற்படி நடனத்தின்போது பதிவாகிய வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக  ஆண்ட்ரீவா எகிப்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த, கைஸா நகரிலுள்ள நீதிமன்றம்  வுக்கு 12 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தள்ளது.

இத்தீர்ப்புக்கு எதிராக  ஆண்ட்ரீவா மேன்முறையீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!