ஏறாவூர் காட்டுப் பள்ளிவாசல் உண்டியல் பணம் திருட்டு!

0 101

                                                                                                   (ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூர் காட்டுப்பள்ளி வாசலுக்குரிய பணம் நிரம்பியிருந்த உண்டியல் மற்றும் கடை ஒன்றுக்குச் சொந்தமான பணம் உட்பட மற்றும் பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) அதிகாலை அளவில் ஏறாவூர் காட்டுப் பள்ளி வீதியை அண்டியுள்ள காட்டுப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அப்பள்ளி வாசலுக்குச் சொந்தமான கடைத்தொகுதி கடை ஒன்றிலேயே இத்திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த கடையின் முன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தவர்களால் அங்கிருந்த பள்ளிவாசலுக்குச் சொந்தமான உண்டியல் பணம், குறித்த கடைக்குச் சொந்தமான பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களும் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!