‘பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டாதே’ என கோஷித்து ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

0 298

                                                                                  (கல்குடா நிருபர், வாழைச்சேனை நிருபர் க.ருத்திரன்)

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள மீராவோடை வாராந்த சந்தை தொடர்ந்தும் நடைபெற வேண்டும் எனக் கோரி ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக அப்பகுதி மக்களும், மீராவோடை மீரா ஜீம்ஆ பள்ளிவாசல், மீராவோடை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த பேரணியும்  ஆர்ப்பாட்டமும் இன்று (17)  மீராவோடையில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை வாராந்த சந்தையை மாதத்தில் இரண்டு தடவைகள் அதாவது, முதலாவது வாரமும், இறுதியாக வருகின்ற மூன்றாவது வாரமும் வாராந்த சந்தையாக நடத்துமாறு ஓட்டமாவடி பிரதேச சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததனர்.

குறித்த பேரணியையும், ஆர்ப்பாட்டத்தையும் மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாசல், மீராவோடை வர்த்தக சங்கம், பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தின.  

இதன்போது வாராந்த சந்தை மூவினத்தின் சகவாழ்வின் அடையாளம் அதனைச்  சீர்குலைக்க வேண்டாம், தவிசாளரே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டாதே, ஏழைக்களுக்காக ஆரம்பித்த சந்தையை செல்வந்தருக்காக மூடாதே, கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்திலுள்ள 60,00 பேரின் உரிமையை 16 பேருக்காக மறுக்காதே, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (விபரமான செய்தியும் படங்களும் நாளைய மெட்ரோ நியூஸில்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!