முகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் இரு பெண்கள் காயம்!

0 124

                                                                                                                      (மயூரன்)
யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று (17) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்களே இந்தச் சம்பவபத்தில் படுகாயமடைந்தனர்.

இன்று காலை முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே, புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்துச் சிதறிய போதே இவர்கள் காயமடைந்தனர்.

சம்பவத்தில் பரந்தனைச் சேர்ந்த 6 வயதுப் பிள்ளையின் தாயும் பெண் உத்தியோகத்தர் ஒருவருமே காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo