தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பெரு முன்னாள் ஜனாதிபதி!

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய பொலிஸார் முயன்றபோது சம்பவம்

0 120

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா இன்று (17) தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்துள்ளார்

. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1985 முதல் 1990 வரையும் பின்னர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டுவரையும்  பெருவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் அலன் கார்சியா.

பிரேஸில் நிர்மாணத்துறை நிறுவனமான ஒடேப்ரேச்சிடமிருந்து லஞ்சம் பெற்றார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 69 வயதான அலன் கார்சியா இக்குற்றச்சாட்டை நிராகரித்து வந்தார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக அலன் கார்சியாவை கைது செய்வதற்கு அவரின் வீட்டுக்கு பொலிஸார் இன்று சென்றனர்.

அலன் கார்சியாவை கைது செய்ய பொலிஸார் முற்பட்ட வேளையில், அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அலன் கார்சியாவின் தலையில் துப்பாக்கி ரவை பாய்ந்தது. அதையடுத்து தலைநகர் லீமாவிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின் அவர் உயிரிழந்ததை பெருவின் தற்போதைய ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கரா உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo