சீரற்ற காலநிலையால் 4 விமானங்கள் மத்தளயில் தரையிறக்கம்

0 128
மத்தளயில் தரையிறக்கப்பட்ட QR 654 விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் இன்று பிற்பகல் நிலவிய சீரற்ற காலநிலையால், அவ்விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த 5 விமானங்கள் வேறு விமான நிலையங்களை நோக்கி திருப்பியனுப்பப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, மலேசியா, கோலாலம்பூரிலிருந்து வந்த UL -315, இந்தோனேஷியா, ஜகார்தாவிலிருந்து வந்த UL -365 மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்த UL -303 ஆகிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின்  மூன்று விமானங்களும், கத்தார் தோஹாவிலிருந்து வந்த QR 654 என்ற கத்தார் எயார்வேய்ஸ் விமானமும் முறையே பி.ப 5.12 , 5.33 , 5.51 மற்றும் 5.59 மணிக்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.

மேலும், மதுரையிலிருந்து கட்டுநாயக்க வந்துகொண்டிருந்த UL 140 என்ற விமானம் மீண்டும் மதுரையை நோக்கி அனுப்பப்பட்டது. இதேவேளை, மேற்படிநான்கு விமானங்களையும் மத்தளயிலிருந்து மாலை 6.25 மணியளவில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

(டீ.கே.ஜி.கபில)

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo