இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரட்ன நியமிப்பு; உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் நாளை தெரிவு

0 160

(நெவில் அன்தனி)

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் நடைபெறவுள்ள 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக ஆரம்ப வீரர் திமுத் கருணாரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அந்நிய மண்ணில் வெற்றிபெறச் செய்தவர் என்ற அடிப்படையிலும் அணியில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியவர் என்ற வகையிலும் அவரிடம் அணித் தலைமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அஷன்த டி மெல் தலைமையிலான தெரிவுக் குழுவினர் நாளை கூடி உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் இடம்பெறப்போகும் ஏனைய வீரர்களை இன்று அறிவிக்கவுள்ளனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அண்மைக் காலமாக சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் இலங்கை, கடைசியாக 2016இல் இருதரப்பு தொடர் ஒன்றில் அயர்லாந்தை வெற்றிகொண்டிருந்தது.

அதன் பின்னர் இரண்டு மும்முனை தொடர்களை இலங்கை வென்றிருந்தது. ஆனால் தரவரிசையில் முன்னிலையில் உள்ள அணிகளை இலங்கையினால் வெற்றிகொள்ளக் கூடாமல் போயுள்ளது. மேலும் இந்த வருடம் விளையாடிய 8 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை தோல்விகளையே சந்தித்துள்ளது.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையிலேயே தரநிலை வரிசையில் 8ஆவது இடத்தில் இருந்தவாறு 13ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.வெற்றிபெறுவதற்கு அற்பசொற்ப அணி (அண்டர்டோக்ஸ்) என்ற பட்டத்துடன் 1996இல் களம் இறங்கி கிரிக்கெட் உலகையே பிரமிக்க வைத்து உலக சம்பியன் பட்டத்தை இலங்கை சூடியதை நினைவில் நிறுத்தி, இம்முறை இலங்கை அணியை இறுதி சுற்றுவரை கொண்டு செல்லும் கங்கணத்துடன் தெரிவாளர்கள் ஒரு சமபலம் கொண்ட அணியைத் தெரிவு செய்வார்கள் என நம்பப்படுகின்றது.

இலங்கை குழாத்தை தெரிவு செய்வதற்கு முன்னோடியாக நடத்தப்பட்ட சுப்பர் மாகாண 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த திமுத் கருணாரட்னவை விட லசித் மாலிங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, லஹிரு திரிமான்ன, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், அக்கில தனஞ்சய ஆகியோர் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறுவதற்கு தகுதியானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

குசல் ஜனித் பெரேரா உபாதையிலிருந்து மீண்டு திடகாத்திரத்துடன் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவரை குழாத்தில் இணைக்க வாய்ப்புள்ளது.அதிரடி ஆரம்ப வீரர்களை இம்முறை எதிர்பார்க்க முடியாவிட்டாலும் திமுத் கருணாரட்ன (உறுதி), லஹிரு திரிமான்ன, சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக்க ஆகிய ஐவரில் குறைந்தது மூவர் ஆரம்ப வீரர்களாக குழாத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது. குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வாவும் ஆரம்ப வீரர்களாக விளையாடக்கூடியவர்களே.

மத்­திய வரி­சையில் ஏஞ்­சலோ மெத்யூஸ், தினேஷ் சந்­திமால் அல்­லது நிரோஷன் திக்­வெல்ல இடம்­பெ­றுவர்.
சக­ல­துறை வீரர்­க­ளாக திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், தென் ஆபி­ரிக்­காவை இரு­பது 20இல் கலக்­கிய இசுறு உதான ஆகி­யோரும் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளாக லசித் மாலிங்க, கசுன் ரஜித்த, சுரங்க லக்மால் ஆகி­யோரும் குழாத்தில் இடம்­பி­டிப்­பார்கள் என கரு­தப்­ப­டு­கின்­றது.

இவர்­களை விட குசல் மெண்டிஸ், விஷ்வா பெர்­னாண்டோ, ஏஞ்சலோ பெரேரா, ஓஷாத பெர்னாண்டோ ஆகியோரும் தெரிவாளர்களால் கருத்தில் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
எவ்வாறாயினும் இங்கு குறிப்பிடப்பட் டுள்ளவர் களில் 15 பேருக்கே உலகக் கிண்ண குழாத்தில் இடம் வழங்கப்படும். யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்பது நாளை பிற்பகலுக்குள் தெரியவரும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo