தபால் பொதிகளை அஞ்சல் உத்தியோகத்தர்களுக்கு முன்பாக பொதியிடவும்

0 202

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக வழங்கப்படும் தபால் பொதிகளை, தபாலகத்தின் கருமபீட உத்தியோகத்தர்  அல்லது அங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியொருவரின் முன்பாக பொதியிட்டு தபால் நிலையத்தில் கையளிக்குமாறு அஞ்சல் மா அதிபர் பொதுமக்களை கோரியுள்ளார்.

அவ்வாறே, தபால் நிலையத்தினுள் வைத்து பொதியிடப்படும் பொதிகளை மாத்திரம் பெற்றுக்கொள்ளுமாறு தபால் நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தபால்நிலையங்களுக்கு வெளியிலிருந்து பொதியிடப்பட்டு கொண்டுவரப்படும் பொதிகளை பரிசோதித்தன் பின்னர் பொறுப்பேற்க அல்லது அவற்றை நிராகரிக்க தபால் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!