வாக்களிப்பதை வலியுறுத்தி ஷாருக் கான் பாடிய பாடல் வீடியோ

0 981

பொலிவூட் நடிகர் ஷாருக் கான், தேர்தலில் வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்தும் வகையில் பாடல் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புகள் கட்டங் கட்டமாக நடைபெறுகின்றன. இத் தேர்தலில் மக்களை வாக்களிப்பதற்குத் தூண்டும் படைப்புகளை மேற்கொள்ளுமாறு பிரபலங்களிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் ஷாருக் கான், வாக்களிக்கத் தூண்டும் ‘ராப்’ பாடல் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
‘கரோ மத்டான் எனும் இப்பாடலை ஷாருக் கான் பாடியுள்ளார். இப்பாடல்வரிகளை அபி விரால் எழுதியுள்ளார். துனிஷ்க் பக்சி இசையமைத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளதுடன், முதல் தடவை வாக்காளர்கள், ஷாருக் கானின் வேண்டுகோளை ஏற்று பெரும் எணிக்கையில் வாக்களிக்க வருவார்கள் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ஷாருக் கான் பாடிய பாடல் வீடியோ

 


 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!