நியூஸிலாந்து தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இலங்கையில் குண்டுத் தாக்குதல்கள்: அமைச்சர் ருவன்

321 பேர் பலி

0 213

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இலங்கையில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே இராஜங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இவ்வாறு கூறினார்.

நேற்றுமுன்தினம் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள், ஹோட்டல்கள் உட்பட்ட இடங்களில்  குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாகவும்  அவர்  தெரிவித்தார்.

‘இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவங்கள், கிறைஸ்ட்சேர்ச் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது: என இராஜங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன  கூறினார்.

“தேசிய தௌஹீத் ஜமா அத்” எனும் அமைப்பே இத்தாக்குதல்களின் பின்னால் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!