வரலாற்றில் இன்று ஏப்ரல் 23 : 1993 லலித் அத்­துலத் முதலி கொல்­லப்­பட்டார்

0 156

1343: எஸ்­தோ­னி­யாவில் நடை­பெற்ற ஜேர்­ம­னி­யர்­க­ளுக்கு எதி­ரான கல­வ­ரங்­களில் 1,800 ஜேர்­ம­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1635: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது அரசுப் பாட­சா­லை­யான பொஸ்டன் இலத்தீன் பாட­சாலை மசா­சூசெட்ஸ் மாநி­லத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1639: சென்­னையில் செயின்ற் ஜோர்ஜ் கோட்டை நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

1660: சுவீடன், மற்றும் போலந்து ஆகி­ய­வற்­றிற்கு இடையில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பிர­தே­சங்கள் தொடர்­பாக உடன்­பாடு ஏற்­பட்­டது.

1896: நியூயோர்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்­ட­பத்தில் Koster and Bial’s Music Hall) ‘வாட்­வில்லி’ குழு­வி­னரால் ‘இரண்டு அழ­கிகள் குடை நாட்­டியம் ஆடு­வது’ போன்ற காட்சி காண்­பிக்­கப்­பட்­டது. இதுதான் விட்­டாஸ்கோப் என்ற ஆரம்­ப­கால திரைப்­படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்­பிக்­கப்­பட்ட முதல் காட்சி ஆகும்.

1932: நெதர்­லாந்தில் 153-ஆண்­டுகள் பழ­மை­யான டி ஆட்­ரியான் என்ற காற்­றாலை தீயில் எரிந்து அழிந்­தது.

1940: அமெ­ரிக்­காவின் மிசி­சிப்­பியில் நாட்செஸ் என்ற இடத்தில் இரவு விடுதி ஒன்று தீப்­பற்­றி­யதில் 198 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1941: இரண்டாம் உலகப் போரில் ஜெர்­ம­னியின் முப்­ப­டைகள் தாக்­கு­தலை ஆரம்­பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதன்ஸ் நகரை விட்டு வெளி­யே­றினார்.

1966: முதலாம் உலகத் தமி­ழா­ராய்ச்சி மாநாடு கோலா­லம்­பூரில் நிறை­வ­டைந்­தது.

1984: எயிட்ஸ் வைரஸ் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

1987: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் கொனெக்­டிகட் மாநி­லத்தில் கட்­டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்­ததில் 28 கட்­டிடத் தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1990: ஐநா மற்றும் பொது­ந­ல­வாய நாடுகள் அமைப்­பு­களில் நமீ­பியா சேர்க்­கப்­பட்­டது.

1993: இலங்­கையின் முன்னாள் அமைச்சர் லலித் அத்­து­லத்­மு­தலி கொழும்பில் நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­ட­மொன்­றின்­போது கொல்­லப்­பட்டார்.

1993: எரித்­தீ­ரி­யாவில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பில் எதி­யோப்­பி­யாவில் இருந்து பிரி­வ­தற்கு எரித்­தி­ரி­யர்கள் பெரு­ம­ளவில் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.

1997: அல்­ஜீ­ரி­யாவில் ஒமா­ரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2005: யூரியூப் இணையத்தில் முதலாவது வீடியோவாக “மீ அட் த ஸு” (Me at the zoo) எனும் வீடியோ தரவேற்றம் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!