இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஒருவர் குடும்பத்துடன் ஆஸியில் தங்கியிருந்தார்: அவுஸ்திரேலிய பிரதமர்

0 213

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய நபர் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர் எனவும், அவர் தனது குடும்பத்தினரையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பித்திருந்தார் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

‘தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் அவுஸ்திஸ்திரேலியாவில் தங்கியிருந்தார்’ என என்னால் உறுதிப்படுத்த முடியும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறினார்.

மேற்படி நபர் அவுஸ்திரேலிய மாணவர் மற்றும் பட்டதாரி விசாவை வைத்திருந்தார். அத்துடன் மனைவி மற்றும் பிள்ளையொன்றுக்கான விசாவை கொண்டிருந்தார்.

2013 ஆம் ஆண்டில் அவுர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறினர். அதன்பின் அந்நபர் திரும்பி வரவில்லை என பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!