பள்ளிவாசல்களை தாக்க இலக்கு வைக்கும் சஹ்ரான் பயங்கரவாத குழு! IGPக்கு அறிக்கை

0 621

                                                                                       (எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் தொடராக, தமது கொள்கைக்கு மாற்றமான கொள்கைகளை உடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாககுதல் நடாத்த அடிப்படைவாத கொள்கை கொண்ட, மொஹம்மட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான விசாரணைப் பிரதானியான சிஐடியின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கை கொடுத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவரது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்புக் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதம் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன பொலிஸ் மா அதிபரை தெரியப்படுத்தியுள்ளார். (விபரமான செய்தி நாளைய (27) மெட்ரோ நியூஸில்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!