வடமராட்சி கிழக்கில் வெடிபொருட்கள் மீட்பு!

0 291

                                                                                                           (மயூரன்)

வடமராட்சி கிழக்கு- அம்பன் பகுதியில் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தைத்  தோண்டிய போது  பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகப் பொலிஸாா் தெரிவித்துள்ளனர். 
அம்பன் பகுதியில் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக இன்று (27)  ஒருவா் அத்திவாரம் தோண்டியுள்ளாா். இதன்போது அத்திவாரக் குழிக்குள் இருந்து ஒரு பிளாஸ்டிக் பெரல் காணப்பட்டுள்ளது.

குறித்த வீட்டாா் பிளாஸ்டிக் பரலை சோதித்தபோது அதற்குள் பெருமளவு வெடிபொருட்கள்  காணப்பட்டதனையடுத்து பொலிஸாருக்குத்  தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற  பொலிஸாா் பிளாஸ்டிக் பெரலுக்குள்ளிருந்து பெருமளவு வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனா். 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!