எனது சகோதரர் இப்படி செய்வார் என ஒருபோதும் நான் எண்ணவில்லை- ஸஹ்ரானின் சகோதரி

0 556

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடந்த குண்டுத் தாக்­கு­தல்­களை தனது சகோ­தரர் நடத்­துவார் என தான் ஒரு­போதும் எண்­ணி­யி­ருக்­க­வில்லை என, ஸஹ்ரான் ஹுஸைன் மத­னியா தெரி­வித்­துள்ளார்.

இத்­தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாகக் கரு­தப்­படும், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஸ்தாப­க­ரான ஸஹ்ரான் ஹாஷிமின் இளைய சகோ­த­ரியே ஸஹ்ரான் ஹுஸைன் மத­னியா ஆவார்.காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து, பி.பி.­சிக்கு அளித்த செவ்­வி­யொன்­றி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு, நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளிலும் நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களால் குறைந்­த­பட்சம் 359 பேர் உயி­ரி­ழந்­துள்­ளதுடன் மேலும் நூற்­றுக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தனது சகோ­த­ரரின் நட­வ­டிக்­கையால் தாம் மிகவும் பீதி­ய­டைந்­துள்­ள­தா­கவும் அடுத்து என்ன நடக்கும் என அச்­ச­ம­டைந்­துள்­ள­தா­கவும், ஸஹ்ரான் ஹுஸைன் மத­னியா கூறி­யுள்ளார். மத­னி­யா­வி­டமும் பொலிஸார் விசா­ரணை நடத்­தினர். ஆனால், அவரை ஒரு சந்­தேக நப­ராக கரு­த­வில்லை என பி.பி.சி தெரி­வித்­துள்­ளது.

ஸஹ்ரான் குடும்­பத்தின் 5 பிள்­ளை­களில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஸ்தாபகர் ஸஹ்ரான் ஹாஷிம் மூத்­த­வ­ராவார். ஸஹ்ரான் ஹுஸைன் மத­னியா மிக இளை­யவர். முஸ்லிம் குழுக்­க­ளுடன் வன்­மு­றை­களில் ஈடு­பட்டு 2017 ஆம் ஆண்டு ஸஹ்ரான் ஹாஷிம் தலை­ம­றை­வான பின்னர், அவ­ருடன் தான் தொடர்பு­ கொள்­ள­வில்லை என ஸஹ்ரான் ஹுஸைன் மத­னியா தெரி­வித்­துள்ளார்.

‘அவரின் செயற்­பா­டு­களை ஊட­கங்கள் மூலமே நான் தெரிந்­து­கொண்டேன். ஆவர் இப்­படி செய்வார் என ஒரு கணமும் நான் எண்­ணி­யி­ருக்­க­வில்லை. அவர் எனது சகோ­த­ர­ரா­னலும், அவர் செய்­த­வற்றை நான் எதிர்க்­கிறேன். இந்­ந­ட­வ­டிக்­கையை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அவர் குறித்து இனி நான் கரி­சனை கொள்ளப் போவ­தில்லை’ என ஸஹ்ரான் ஹுஸைன் மத­னியா தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஞாயி­றன்று நடந்த தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு ஐ.எஸ். அமைப்பு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பொறுப்­பேற்­றது. இத்­தாக்­கு­தல்­களை நடத்­திய குழு­வினர் எனக் கூறி 7 பேர் அடங்­கிய வீடி­யோ­வையும் ஐ.எஸ்.அமைப்பு வெளி­யிட்­டது. அந்த வீடி­யோவில் ஸஹ்ரான் ஹாஷிம் மாத்­தி­ரமே மறைக்­கப்­ப­டாமல் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை இத்­தாக்­கு­தல்­களில் ஸஹ்ரான் ஹாஷிம் இறந்­து­விட்­டாரா, இல்­லையா என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.
இத்­தாக்­கு­தல்­களில் 9 பேர் பங்­கு­ பற்­றி­ய­தாக இலங்கை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இவர்­களில் ஒருவர் பெண் ஆவார்.
இது குறித்து பொலிஸார் மேலும் தெரி­விக்­கையில், ‘தாக்­கு­தல்­களை நடத்­திய அனை­வரும் மத்­திய தர குடும்­பத்தைச் சேர்ந்த, கல்வி கற்­றவர்கள். அவர்­களில் ஒருவர் பிரிட்டன், அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் கல்வி கற்­றவர்.

செல்­வந்த வர்த்­தகர் ஒரு­வரின் மகன்­க­ளான இரு சகோ­த­ரர்­களும் இவர்­களில் அடங்­கு­கின்­றனர். இவர்­களில் ஒரு­வரின் மனைவி, கடந்த ஞாயி­றன்று தெமட்­ட­கொடை வீடொன்றில் பொலிஸார் சோதனை நடத்­தி­ய­போது குண்­டை­வெ­டிக்கச் செய்து உயி­ரி­ழந்­த­துடன், தனது இரு பிள்­ளைகள் மற்றும் பொலிஸ் உத்­தி­யோத்­தர்கள் பல­ரையும் கொன்றார்’ எனத் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!